அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அத்தஹிய்யாத் இருப்பில் உட்காரும் முறை…


தினம் ஒரு ஹதீஸ்-181

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أنبأ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ، ثنا عُبَيْدُ بْنُ شَرِيكٍ الْبَزَّارُ، ثنا يَحْيَى بْنُ بُكَيْرٍ، ثنا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، أَنَّهُ كَانَ جَالِسًا مَعَ نَفَرٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : فَذَكَرْنَا صَلاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ ‏أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، رَأَيْتُهُ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ ، وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ ، ثُمَّ هَصَرَ ظَهْرَهُ ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ ، اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ ، وَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ ، وَلا قَابِضِهِمَا ، وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ‏‎‏ ‏وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ قَدَّمَ رِجْلَيْهِ ، ثُمَّ جَلَسَ عَلَى رِجْلِهِ الْيُسْرَى ، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ ، قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى وَجَلَسَ عَلَى مَقْعَدَتِهِ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 828

நான் சில நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்தேன். நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி அப்போது பேசிக் கொண்டோம். அங்கிருந்த அபூ ஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நான் மிகவும் அறிந்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறும்போது தம் இரண்டு கைகளையும் தம் தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவு செய்யும் போது இரண்டு கைகளையும் மூட்டுக் கால்களின் மீது படியச் செய்வார்கள். பின்னர் தம் முதுகை (வளைவு இன்றி) நேராக்குவார்கள். (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும் போது ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிர்வார்கள். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது தம் கைகளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தம் கால்விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் உட்காரும் போது இடது காலை (வலப்புறமாகக்) கொண்டு வந்து, வலது காலை நாட்டி வைத்துத் தம் இருப்பிடம் தரையில் படியுமாறு உட்கார்வார்கள்‘ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் இப்னு அம்ர் (ரஹ்)
நூல்: புகாரி 828

Narrated Mohamed bin Am’r (rah):
I was sitting with some of the companions of Allah’s Messenger (sal) and we were discussing about the way of praying of the Prophet. Abu Humaid As-Sa`idi (ra) said, “I remember the prayer of Allah’s Messenger (sal) better than any one of you. I saw him raising both his hands up to the level of the shoulders on saying the Takbir; and on bowing he placed his hands on both knees and bent his back straight, then he stood up straight from bowing till all the vertebrate took their normal positions. In prostrations, he placed both his hands on the ground with the forearms away from the ground and away from his body, and his toes were facing the Qibla. On sitting In the second rak`a he sat on his left foot and propped up the right one; and in the last rak`a he pushed his left foot forward and kept the other foot propped up and sat over the buttocks.
[Bukhari 828]
Blogger Widget

2 comments:

  1. Pengal tholugai patri karuthuverupadugal ullana
    Athanai thelivupaduthavum

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... சகோதரி, (முக்காடு, ஜமாஅத்தில் நிற்கும் இடம் போன்ற ஓரிரு பெண்களுக்கான சட்டம் தவிர்த்து) தொழுகைமுறை என்பது அனைவருக்கும் ஒன்று தான்..

      Delete