அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -5


தினம் ஒரு ஹதீஸ்-91

வெள்ளிக்கிழமையில் நாம் கேட்கும் அனைத்து துஆவும் ஏற்கப்படும் ஒரு நேரம் உண்டு.அது எந்த நேரமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் ஹதீஸ்களில் ஒன்று:
இமாம் அமர்தல் என்பது மிம்பரில் அமர்வதைக் குறிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இமாம் மிம்பரில் சொற்பொழிவாற்ற துவங்கினால் முடியும் வரை அந்த உரையைக் கேட்க மட்டும் தான் செய்ய வேண்டும். நன்மையான விஷயங்களைக் கூட பேசக் கூடாது. எனவே, அமர்தல் என்பது தொழுகையில் அமரும் இருப்பைத் தான் குறிக்கும், தொழுகையில் அமரும் நிலையில் துஆ செய்ய அனுமதி உண்டு, (பார்க்க: 1 2 & 3). ஆகவே, அத்தஹியாத்து, ஸலவாத்து ஓதிய பின் ஸலாம் கொடுக்கும் வரை துஆ கேட்க வேண்டும், அந்த நேரத்தில் துஆ கேட்பதை நாம் செயல்படுத்த வேண்டும். மேலும், பொதுவாகவே தொழுகையின் ஸஜ்தாவில் கேட்கும் துஆவானது, அல்லாஹ்விடம் ஏற்கப்பட அதிகம் தகுதி உள்ளது என்பதால் அதையும் தவற விடக் கூடாது, வழமை போல் அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ، بُكَيْرٍ ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا مَخْرَمَةُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ: قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلاَةُ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1546

என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள (துஆ ஏற்கப்படும்) அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அ(ந்த அரிய நேரமான)து, இமாம் அமர்வதற்கும் (ஜுமூஆ) தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.
அறிவிப்பவர்: அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ (ரஹ்)
நூல்: முஸ்லிம் 1546

Abu Burda bin Abu Musa al-Ash’ari (rah) reported:
‘Abdullah bin Umar (ra) said to me: Did you hear anything from your father narrating something from the messenger of Allah (sal) about the time on Friday? I said: Yes, I heard him say from the Messenger of Allah (sal) (these words): “It is between the time when the Imam sits down and the end of the prayer.
[Muslim 1546]
துஆ ஏற்கப்படும் வேளைகள் பற்றிய முந்தைய பதிவுகளைக் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget