அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் -3


தினம் ஒரு ஹதீஸ்-120

أخبرني عبد الله بن محمد بن علي بن زيادالعدل ، ثنا الإمام أبو بكر محمد بن إسحاق، ثنا أبو سعيد الأشج، ثنا أبو معاوية ، عن هشام بن عروة، عن أبيه ، عن عائشة رضي الله عنها ، أن النبي صلى الله عليه وآله وسلم قال لا تسبوا ورقة فإني رأيت له جنة أو جنتين
ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ ﻟﻠﺤﺎﻛﻢ 4142
‎‏

வரக்கா பின் நவ்ஃபல் அவர்களை ஏசாதீர்கள். அவருக்கு ஒன்று அல்லது இரண்டு சொர்க்கத்தோட்டங்கள் தரப்படுவதாக எனக்கு காட்டப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஹாகிம் / அல்-முஸ்தத்ரக் அலா அல்-ஸஹீஹைன் 4142

Narrated Aisha (ra):
The Prophet (sal) said: “Do not slander Waraka bin Nawfal, for I have seen that he will have one or two gardens in Paradise.
[Hakim / al-Mustadrak alaa al-Sahihain 4142]

அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், என் சகோதரர் மகனே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள். (இதைக் கேட்ட) வரக்கா,(நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூஸாவிடம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, (மகனே!) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே! என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன் என்று சொன்னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்து விட்டார்.(புகாரி 3)

அறிந்துகொள்ளுங்கள்; சொர்க்கத்தில் முஸ்லிமைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 378)

தொடர்புடைய பிற பதிவுகள்: சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் 1 ,2
Blogger Widget