அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கடல் நுரையளவு பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமா? -1


தினம் ஒரு ஹதீஸ்-32

حَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِي عُبَيْدٍ الْمَذْحِجِيِّ قَالَ مُسْلِم أَبُو عُبَيْدٍ مَوْلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَمَنْ سَبَّحَ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ وَحَمِدَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَكَبَّرَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ فَتْلِكَ تِسْعَةٌ وَتِسْعُونَ وَقَالَ تَمَامَ الْمِائَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1048

யார் ஒவ்வொரு (கடமையான) தொழுகைக்குப் பின்பும் 33 முறை “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்)என்றும், 33 முறை “அல்ஹம்துலில்லாஹ்”(அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கே)என்றும், 33 முறை “அல்லாஹு அக்பர்”(அல்லாஹ் மிகப்பெரியன்) என்றும் ஆக மொத்தம் 99 முறை கூறி , இறுதியில் 100 வது முறையாக “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் ‘(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 1048

Narrated Abu Hurairah (ra): The Messenger of Allah (sal) said:
He who recites after every (obligatory) prayer: Subhan-Allah (Allah is free from imperfection)thirty-three times; Al-hamdu lillah (praise be to Allah) thirty-three times; Allahu Akbar (Allah is Greatest) thirty-three times; and completes the hundred with: La ilaha illallahu, wahdahu la sharika lahu, lahul-mulku wa lahul-hamdu, wa Huwa `ala kulli shai’in Qadir (there is no true god except Allah. He is One and He has no partner with Him. His is the sovereignty and His is the praise, and He is Omnipotent)will have all his sins pardoned even if they may be as large as the foam on the surface of the sea.
[Muslim 1048]
Blogger Widget