அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகைக்குப் பின் -3


தினம் ஒரு ஹதீஸ்-286

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي شَدَّادٌ أَبُو عَمَّارٍ، حَدَّثَنِي أَبُو أَسْمَاءَ الرَّحَبِيُّ، قَالَ حَدَّثَنِي ثَوْبَانُ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَنْصَرِفَ مِنْ صَلاَتِهِ اسْتَغْفَرَ اللَّهَ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 276

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடமையான) தொழுகையை முடித்ததும், மூன்று முறை ‘அஸ்தஃக்ஃபிருல்லாஹ்‘ (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறி விட்டு பின்பு,அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம்; வ மின்கஸ் ஸலாம்; தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்” (இறைவா!, நீ சாந்தியளிப்பவன்; உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது; வல்லமையும் மாண்பும் உடைய நீ பேறுமிக்கவன்)” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: திர்மிதீ 276

Narrated Shauban (ra):
When the Messenger of Allah (sal) finished his prayer, he would say ‘Astaghfirullah‘ (I seek Allah’s forgiveness) three times, then say:Allahumma Antas-Salam, wa minkas-Salam, tabarakta ya Dhal-Jalali wal-Ikram(O Allah! You are the Bestower of security and security comes from You; Blessed are You. O Possessor of glory and honour).
[Tirmidhi 276]

Blogger Widget