அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகைக்குப் பின் -2


தினம் ஒரு ஹதீஸ்-261

وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عِيسَى، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ سَمِعْتُ الْحَكَمَ بْنَ عُتَيْبَةَ، يُحَدِّثُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مُعَقِّبَاتٌ لاَ يَخِيبُ قَائِلُهُنَّ -أَوْ فَاعِلُهُنَّ – دُبُرَ كُلِّ صَلاَةٍ مَكْتُوبَةٍ ثَلاَثٌ وَثَلاَثُونَ تَسْبِيحَةً وَثَلاَثٌ وَثَلاَثُونَ تَحْمِيدَةً وَأَرْبَعٌ وَثَلاَثُونَ تَكْبِيرَةً
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1046

சில துதிச்சொற்கள் உள்ளன. அவற்றைக் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதி வருபவர் (மறுமையில்) நஷ்டமடையமாட்டார். (அவை:) முப்பத்து மூன்று முறை “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே) என்றும், முப்பத்து நான்கு முறை “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும் கூறுவதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1046

Ka’b bin ‘Ujra (ra) reported Allah’s Messenger (sal) as saying: There are certain ejaculations, the repeaters of which or the performers of which after every prescribed prayer will never be caused disappointment: “Subhan Allah” (Glory be to Allah) thirty-three times, “Alhamdulillah” (Praise be to Allah) thirty-three times, and “Allahu Akbar” (Allah is most Great) thirty-four times.
[Muslim 1046]
Blogger Widget